
புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க விரும்பினேன், ஆனால் சர்வதேச அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் அது நிகழவில்லை என முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம், "மும்பை பயங்கரவாத தாக்குதல் 2008, நவம்பர் 26-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட கடைசி பயங்கரவாதியும் கொல்லப்பட்ட நிலையில், அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு நான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றேன். அப்போது நான் நிதி அமைச்சராக இருந்தேன்.