
தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டு இருக்கிறது. சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலையானது கடந்த ஓராண்டு காலத்தில் 1,166 டாலர் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,150-ஆக இருந்தது. ஆனால், இன்றைக்கு அது ரூ.10,860-ஆக இருக்கிறது.
தங்கம் விலை இப்படித் தாறுமாறாக உயர்ந்துகொண்டிருக்கிறதே…. இதன் விலை இன்னும் உயருமா….? உயரும் எனில், எவ்வளவு உயரும்… ஒருவேளை, தங்கம் விலை இறங்குவதற்கு வாய்ப்பு ஏதும் இருக்கிறதா என்கிற பல கேள்விகள் பலருக்கும் இருக்கிறது.
இந்த நிலையில், தங்கம் விலை போக்கு இனி எப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பற்றி ‘லாபம்’ நடத்தும் கூட்டத்தில் பேசவிருக்கிறார் பிரபல தங்க முதலீட்டு நிபுணர் சண்முகநாதன்.
இந்த ஆன்லைன் கூட்டத்தில், தங்கத்தின் விலை ஏற்றத்திற்கான உலகளாவிய காரணங்கள், தங்கம் இனி விலை ஏறுமா, இறங்குமா, தங்கத்தில் எப்படியெல்லாம் முதலீடு செய்யலாம், கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் லாபகரமானதா… என்கிற விஷயங்களைப் பற்றி அவர் விரிவாகப் பேசவிருக்கிறார்.

வரும் சனிக்கிழமை மாலை அதாவது அக்டோபர் 4-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் 1 மணி வரை நடக்கவிருக்கும் இந்த ஆன்லைன் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் என்கிற லிங்கை கிளிக் செய்து தங்களது பெயரைப் பதிவு செய்துகொள்வது அவசியம்.
தங்கத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு தற்போது இருப்பது போல, தங்கம் விலை உயருமா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள பலரும் ஆர்வத்துடன் இருப்பதால், மேற்சொன்ன லிங்க்கைக் கிளிக் செய்து, தங்கள் பெயரை உடனே பதிவு செய்துகொள்வதன் மூலம் ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியும்…