• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பு​திய தமிழகம் உள்ளிட்ட 10 கட்​சிகள் 3 ஆண்​டு​களாக வரு​டாந்​திர தணிக்கை செய்​யப்​பட்ட கணக்​கு​களை தாக்​கல் செய்​யாத நிலை​யில், அக்​கட்​சிகளிடம் தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் கேட்​டுள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவதுபதிவு செய்​யப்​பட்ட அரசி​யல் கட்​சிகள் வரு​டாந்​திர தணிக்கை செய்​யப்​பட்ட கணக்​கு​களை தேர்​தல் ஆணை​யத்​திடம் சமர்ப்​பிக்க வேண்​டும். சென்னை மாவட்​டத்​தில் பதிவு செய்​யப்​பட்ட அனைத்​திந்​திய எம்​.ஜி.ஆர். மக்​கள் முன்​னேற்​றக் கழகம், கிறிஸ்தவ ஜனநாயக முன்​னணி, ஜெபமணி ஜனதா, காம​ராஜர் தேசிய காங்​கிரஸ், மக்​கள் சக்தி கட்​சி, என் இந்​தியா கட்​சி, புதிய தமிழகம், இந்​திய குடியரசுக் கட்சி (சிவ​ராஜ்), தமிழக முன்​னேற்ற காங்​கிரஸ், வளமான தமிழக கட்சி ஆகிய 10 அரசி​யல் கட்​சிகள் 2021-22, 2022-23 மற்​றும் 2023-24 ஆகிய நிதி​யாண்​டு​களுக்​கான வரு​டாந்​திர தணிக்கை செய்​யப்​பட்ட கணக்​கு​களை நிர்​ண​யிக்​கப்​பட்ட காலத்​துக்​குள் சமர்ப்​பிக்​க​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *