• September 30, 2025
  • NewsEditor
  • 0

​தாம்​பரம் மாநக​ராட்​சி, சேலை​யூர் பகு​தி​யில் உள்ள சாலை ஆக்​கிரமிப்பை அகற்ற கோரி கடந்த, 15 ஆண்​டு​களாக திமுக கவுன்​சிலர் தாமோதரன் கோரிக்கை மனு அளித்து வரு​கிறார். ஆனால், மாநக​ராட்சி நிர்​வாகம் அரசி​யல்​வா​தி​களின் அழுத்​தம் காரணமாக ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றாமல் மெத்​தன​மாக செயல்​படு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. தாம்​பரம் மாநக​ராட்சி எல்லைக்கு உட்​பட்ட, சேலை​யூர் கிராமம், 45-வது வார்​டில் உள்ள ஏழு​மலை தெரு – பள்​ளிக்​கூட தெரு இணைப்பு சாலை​யை, சிலர் சட்ட​விரோத​மாக ஆக்​கிரமிப்பு செய்து வீடு​கள் கட்​டி​யுள்​ளனர்.

இந்த தெரு​வில் அங்​கன்​வாடி மற்​றும், கால்​நடை மருத்​து​வ​மனை செயல்​பட்டு வரு​கிறது. மொத்​தம் 22 அடி அகல​முள்ள சாலை​, ஆக்​கிரமிப்​பின் காரண​மாக, 3 அடி​யாக குறுகி​விட்​டது. குழந்​தைகளை அங்​கன்​வாடிக்கு அழைத்​துச் செல்​லும் பெற்​றோர்​கள், செல்​லப் பிராணி​கள், ஆடு, மாடு​களை மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லும் பொது​மக்​களுக்கு ஆக்​கிரமிப்​பு​கள் இடையூறாக உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *