
பவன் கல்யாணின் `ஓ.ஜி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மாஸ், சென்டிமென்ட் என அனைத்து வகைகளிலும் பவர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் புல் மீல்ஸாக அமைந்திருக்கிறது.
ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் காட்சிகள் படத்தில் அதிகமாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் `குட் பேட் அக்லி’ திரைப்படத்துடன் `ஓ.ஜி’ திரைப்படத்தையும் ஒப்பிட்டுப் பேசினர்.
இது குறித்து `ஓ.ஜி’ படத்தின் இயக்குநர் சுஜித் சமீபத்திய பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், “நான் OG-யின் டீசரை வெளியிட்டபோது ஆதிக் ரவிச்சந்திரன் `குட் பேட் அக்லி’ படத்திற்கான எழுத்து வேலைகளைத் தொடங்கவில்லை.
அவரை எனக்கு நன்றாகத் தெரியும். ஆதிக் உண்மையாகவே என்னை நேசிக்கிறார். `சாஹோ’ படம் செய்தபோது அவர் எனக்கு ஒரு நீண்ட மெசேஜ் அனுப்பினார்.

அவர் என் படைப்புகளின் மிகப்பெரிய ரசிகன் என்று செய்தியில் கூறினார். அவருடைய முதல் படமான `த்ரிஷா இல்லனா நயன்தாரா’ முதல் அவரை எனக்குத் தெரியும்.
அந்தப் படத்திற்கு நான் அவருக்கு கருத்துகளையும் கொடுத்திருந்தேன். எனவே, அவர் அப்போது கதையை எழுதவே தொடங்கவில்லை என்பது எனக்குத் தெரியும்.” எனக் கூறியிருக்கிறார்.