
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டலத்தை சேர்ந்த இணை ஆணையர், துணை ஆணையர், செயல் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: முன் எப்போதும் இல்லாத வகையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு இதுவரை ரூ.1,187.83 கோடியை முதல்வர் ஸ்டாலின், அரசு நிதியாக வழங்கியுள்ளார். இந்த துறை தொடங்கப்பட்ட நாள்முதல் எந்த ஆட்சி காலத்திலும் இல்லாத வகையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 3,707 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.