
சென்னை: சென்னை, சேலம் கோட்டங்களுக்கு உட்பட்ட 20 ரயில் நிலையங்களில் ‘எலெக்ட்ரானிக் இன்ட்டர் லாக்கிங்’ என்ற நவீன சிக்னல் முறையை செயல்படுத்த ரயில்வே வாரியம் ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், பாதுகாப்பாக இயக்கவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ‘எலெக்ட்ரானிக் இன்ட்டர் லாக்கிங்’ என்ற நவீன சிக்னல் முறையை செயல்படுத்த ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ‘எலெக்ட்ரானிக் இன்ட்டர் லாக்கிங்’ என்பது ரயில்களை பாதுகாப்பாக இயக்க ரயில்வே கையாளும் இயந்திர தொழில்நுட்ப கட்டமைப்பு ஆகும்.