• September 29, 2025
  • NewsEditor
  • 0

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

146 ரன்கள் இலக்கை நோக்கி சேஸிங்கில் இறங்கிய இந்திய அணி 20 ரன்களுக்கு அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது மீட்பர் போல இறங்கிய திலக் வர்மா 69 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்து இந்தியாவை வெற்றி பெறவைத்தார்.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற இந்திய வீரர்கள்

ஆட்ட நாயகன் விருது திலக் வர்மாவுக்கும், தொடர் நாயகன் விருது அபிஷேக் சர்மாவுக்கும் வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்ற முறையில் மொஹ்சின் நக்வியின் (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் பாகிஸ்தான் அமைச்சர்) கரங்களால் ஆசிய கோப்பை வழங்க திட்டமிடப்பட்டது.

ஆனால், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவரின் கைகளால் கோப்பை வாங்கக் கூடாது என்று புறக்கணித்துவிட்டார்.

அதனால், அவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டார். கோப்பையும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த லெப்டினன்ட் வினய் நர்வாலின் தந்தை ராஜேஷ் நர்வால், இந்திய வீரர்களின் இச்செயலை ஆதரித்திருக்கிறார்.

பஹல்காமில் உயிரிழந்த லெப்டினன்ட் வினய் நர்வாலின் தந்தை ராஜேஷ் நர்வால்
பஹல்காமில் உயிரிழந்த லெப்டினன்ட் வினய் நர்வாலின் தந்தை ராஜேஷ் நர்வால்

NDTV ஊடகத்திடம் இது குறித்து பேசிய ராஜேஷ் நர்வால், “நாடுதான் முதன்மை என நம் வீரர்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவும் காட்டியிருக்கின்றனர்.

பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காததன் மூலம் ஒரு வலுவான செய்தியை அனுப்பியிருக்கின்றனர்.

இந்திய குடிமக்களோ அல்லது நம் வீரர்களோ, பாகிஸ்தான் வீரர்களையோ அல்லது விளையாட்டையோ வெறுக்கவில்லை.

ஆனால், பாகிஸ்தானை அவமதிக்கும் அந்நாட்டின் தலைவர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு ஒரு செய்தியை அனுப்புவது முக்கியம்.

அதேநேரத்தில், தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடியிருக்கக் கூடாது” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *