
மதுரை: கரூர் சம்பவம் காரணமாக தவெகவை தடை செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மின்னஞ்சல் வழியாக தாக்கல் செய்த மனு: கரூரில் 27.9.2025 அன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் அரசியல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட போதிலும், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்பட பாத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நெரிசலான இடத்தில் கூடினர்.