• September 29, 2025
  • NewsEditor
  • 0

2025 அக்டோபர் -10-ம் தேதி வெள்ளிக்கிழமை உடுமலைப்பேட்டை ஶ்ரீவேங்கடேச பெருமாள் திருக்கோவிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக…

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

திருவிளக்கு பூஜை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதி புராணத்தில் ஜமதக்னீ முனிவர் மற்றும் ரேணுகா தேவி சம்பந்தப்பட்ட இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு கொங்கு நாட்டின் முக்கிய நகரமாக விளங்கியது இப்பகுதி. உடுமலையைக் கொண்ட தளி பாளையத்தை, 1800-ம் ஆண்டுகளில் பாளையக்காரர்கள் ஆண்டு வந்தனர். தொழில் நகரமாகவும் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வந்த உடுமலையில் திருமலை திருப்பதி வேங்கடவன் எழுந்தருள விருப்பம் கொண்டார் போலும். இந்நகரின் பல பெரியவர்களின் முயற்சியால் 2013-ம் ஆண்டு முதலே இங்கு திருப்பதி ஏழுமலையானின் தெய்வத் திருமணம் நடைபெற்று வந்தது. பிறகு 18.6.16 அன்று நகர ஆன்றோர்கள் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்ட முடிவின்படி உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் என்ற அமைப்பு நிறுவப்பட்டது.

இந்த ட்ரஸ்டியின் நிர்வாக அறங்காவலராக திரு.வி. ராமகிருஷ்ணன், திரு எம்.வேலுசாமி, திரு. எம். அமர்நாத், திரு. வி. கெங்குசாமி நாயுடு அவர்களின் புதல்வர் திரு.ஜி. ரவீந்திரன் ஆகியோர் இதன் அறங்காவலர்களாகவும் பொறுப்பேற்றனர். அழகிய மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில், மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தமாய் எழுந்தருளி இருக்கும் திருமூர்த்திமலை தென் அரணாய் அமைந்து, கங்கைபோல் புனிதமான அமராவதி பாலாறுகளின் நடுவில், ஏழு குளங்களில் ஏற்றமிகு குளமாய் வளங்கொழிக்கும் செங்குளக் கரையில் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் திருக்கோயில் அமையப்பெற்றது. 2016-ம் ஆண்டு திருமலையில் இருந்து பெருமாள் எடுத்துவரப்பட்டு 2017-ம் ஆண்டு ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.

திருவிளக்கு பூஜை

ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் மூலவர் சந்நிதி நடுநாயகமாக இருக்க, இருபுறமும், ஸ்ரீபத்மாவதித் தாயார், ஸ்ரீஆண்டாள் சந்நிதிகள் உள்ளன. ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகருடாழ்வார் சந்நிதிகளும் இங்கு சிறப்பாக அமைந்துள்ளன. கொங்கு நாட்டுத் திருப்பதி என பக்தர்களால் போற்றப்படும் இத்தலம் வெகு பிரமாண்டமாக அமைந்து ஒவ்வொரு நாளும் திருவிழாக் கோலத்தோடு சிறப்புற்று விளங்கி வருகிறது. திருமலை திருப்பதியைப் போலவே இங்கும் மக்கள் கூட்டம் பெருகி வருகின்றது. இங்கு வந்தாலே ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. அது நடந்தும் வருவது சிறப்பு.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

எனவே உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம். 2025 அக்டோபர்

10-ம் தேதி வெள்ளிக்கிழமை உடுமலைப்பேட்டை ஶ்ரீவேங்கடேச பெருமாள் திருக்கோவிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக…

திருவிளக்கு பூஜை

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *