
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்த அரசியல் கட்சித் தலைவர்களின் பார்வை இது…
விஜயிடமும் கேள்விகளை கேளுங்கள்: துணை முதல்வர் உதயநிதி: கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்வர் உதயநிதி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கரூரில் இதுபோன்ற மிக, மிக துயரமான சம்பவம் நடந்திருக்கக் கூடாது. அரசு சார்பில் முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தும் கோர விபத்து நடந்துவிட்டது.