
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் கரூரில் நேற்று விசாரணையை தொடங்கியது.
கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.