
சென்னை: உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியிடம் முறையிட்ட தவெக தரப்பு, ‘கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் என்பது விபத்து போல தெரியவில்லை; திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.
கரூரில் சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். ஒருபக்கம் பெருந்துயராக சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம், மறுபக்கம் அரசியல் ரீதியில் பல விவாதங்களை கிளப்பியிருக்கிறது.