• September 28, 2025
  • NewsEditor
  • 0

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் கிட்டதட்ட 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்ட பலர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரல் பார்ப்போரைக் கலங்கடிக்கச் செய்திருக்கிறது.

இந்நிலையில் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் விகடனுக்கு பேட்டி அளிக்கையில், ” அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர்னு எல்லா தலைவர்களையும் மந்திரிகளையும் நேர்ல பார்த்திருக்கோம்.

விஜய் பிரசாரம் கரூர்

எங்க வீடு தேடி வருவாங்க பிரசாரம் பண்ண. நாங்களும் எவ்வளவோ மாநாட்டை நேர்ல போயி பாதுகாப்பா பார்த்துட்டு வந்திருக்கோம்.

இங்க இருந்த மாதிரி தாறுமாறா தள்ளு முள்ளு கூட்டத்தை எங்கயும் பார்த்தது இல்ல. எவ்வளவு மக்கள் இறந்து போயிருக்காங்க.

மனசு தாங்கல. அழுகையை அடக்க முடியல. கரூருக்கு ரொம்ப பெரிய கெட்டபெயர் இது.

இவ்ளோ மக்கள் இறந்து போனப்போ மக்களோட மக்களா நிக்காம விஜய் ஓடுனது ரொம்ப பெரிய தப்பு. உங்க வீட்ல துக்கம் விழுந்தா இப்படிதான் பண்ணுவீங்களா” என்று ஆதங்கத்துடன் பேசினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *