
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்த நிலையில், காலையிலிருந்து அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கரூர் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “அவர் எப்படி தலைவராக இருக்க முடியும். அப்பாடி மக்கள் இவ்வளவு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர் களத்துக்கு வரவேண்டுமென்பதில்லை.
அவர் இங்கு இருந்து ஆறுதல் கூறியிருக்க வேண்டும். மக்களுடன் நின்றிருக்க வேண்டும். வெறும் ரூ.20 லட்சம் கொடுத்தால் உயிர் மீண்டும் வருமா?
எல்லா தலைவர்களும் வந்து விசாரித்து ஆறுதல் சொல்லும்போது, அவர் களத்துக்கே இன்னும் வரவில்லை.
நீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பான வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். உடனடியாக விசாரணை வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.