
கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துப் பேசிய சீமான்,
“தவெகவினர் கேட்ட இடத்தை தரவில்லை என்று சொல்கிறார்கள். தம்பிக்கு (விஜய்) இது புதிது. எனக்கு 15 வருடம் அனுபவம் இருக்கிறது. மக்கள் கூடாத இடத்தில் தான் என்னுடைய கூட்டத்திற்கு அரசு இடம் தரும்.
இதையெல்லாம் கடந்துதான் வர வேண்டியதாக இருக்கிறது. இப்படி ஒரு துயர சம்பவத்தில் யாராக இருந்தாலும் ஒரு படபடப்பு இருக்கத்தான் செய்யும்.
இந்த நேரத்தில் நாம் எதையும் விவாதிக்க கூடாது. தம்பி (விஜய்) வரவில்லை என்றாலும் அவர் கட்சியினர் ஆதவ், ஆனந்த் எல்லோரும் வருவார்கள். அதை அவர்கள் செய்வார்கள்.
அவர்கள் அரக்கர்கள் கிடையாது. எல்லோரும் நம் பிள்ளைகள்தான்” என்று சீமான் பேசியிருக்கிறார்.