
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் மாவோயிஸ்ட் தம்பதிகளான ஜக்கு குர்சம் என்கிற ரவி என்கிற ரமேஷ் (28), கமலா குர்சம் (27) ஆகியோரை பாதுகாப்புப் படையினர் கடந்த 23-ம் தேதி கைது செய்தனர். இவர்கள் இருவரைப் பற்றியும் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
அவர்களுடைய வீட்டில் சோதனை நடத்திய போது 10 கிராம் தங்க பிஸ்கட், ரூ.1.4 லட்சம் ரொக்கம், 2 ஆன்ட்ராய்டு போன்கள் மற்றும் மாவோயிஸ்ட் துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் மாவோயிஸ்ட்களுக்கு மருந்துகள், அத்தியாவசிய உணவு பொருட்களை சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.