
அடுத்த மாதம் திருமணமாக இருந்த கரூரைச் சேர்ந்த கோகுலஶ்ரீயும், மதுரையைச் சேர்ந்த ஆகாஷும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று நடந்த தவெக தலைவர் விஜய் பரப்புரையைக் காணச் சென்றுள்ளனர். அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இரண்டு பேருமே உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கோகுலஶ்ரீயின் தாய் கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டதாவது,
“சாவதற்காகத்தான் இப்படிப் போனார்களா? கட்சி கட்சினு ஏன் எல்லாரையும் உயிரை விட வெக்கறீங்க?
கட்சி கட்சினு எத்தனை பேரோட குடும்பம் வீதியில நிக்குது?
அடுத்த மாதம் கல்யாணம். ரெண்டு பேருக்குமே 24 வயசு தான் ஆகுது.
ரெண்டு பேரும் ரெண்டு மணி வரைக்கு பேசிட்டு தான் போனாங்க. கரூர்ங்கறனால போனாங்க.
மாடில தான் நிக்கறேனு சொன்னாங்க. நானும் கூட தான் இருந்தேன். இறங்கி வரையில தான் என் புள்ளைய கொன்னுட்டாங்க.
ஆறரை மணிக்கு போன்ல பேசுனோம். கும்பலா இருக்கு வந்துருங்கனு சொன்னோம். செல்பி எடுத்துட்டு வந்துடறேனு சொன்னாங்க.
செய்திய பாத்துட்டு தான் நாங்க வந்தோம். என் பையன் தப்பிச்சுகிட்டோம். புள்ளையும், மாப்பிள்ளையும் போயிட்டாங்க. என் புள்ளைய ஆசை ஆசையா வளர்த்தேன்” என்றார்.