
தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் சிகிச்சையில் இருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, நாமக்கல், சேலம், மதுரையில் இருந்தும் மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷும் கரூர் சென்றனர்.
இதற்கிடையில், இறந்தவர்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியிருக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களின் கதறலும் நெஞ்சை உறையவக்கிறது.
“எங்க அண்ணனுக்கு இரண்டு மகன்கள் அதில் மூத்த மகன் இறந்துட்டான். அவன் கண்ணுபுல்லா காயமா இருக்கு. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி போயிட்டான்.
இன்னொருத்தன் எங்க இருக்கான்னே தெரியல. எங்க அண்ணியும் ஐசியுல இருக்காங்க. அண்ணா வருவான்னு சொன்னாங்களே… இப்போ இங்க யாரு வந்து என்ன முடியும். வீட்டு வேலை செய்தாவது சோறு போடுவேன்னு சொன்னானே… இப்போ இப்படி ஆகிருச்சே” எனக் கதறி அழுதனர்.