
மைக்கில் மீண்டும் மீண்டும் பிரச்னை
பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி தாமதமாக கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்தார் விஜய். நாமக்கலில் விஜய் பேசியபோது, மைக்கில் ஏற்பட்ட கோளாரால் சிக்கல் ஏற்பட்டது. இப்போது கரூரிலும் அதேபோல விஜய் மைக்கில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் விஜய்யின் பேச்சை தெளிவாக கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
கூட்ட நெரிசலால் தாமதம்
நாமக்கல் – கரூர் ரோட்டில், வேலுச்சாமிபுரத்தில் ரோட்டில் விஜய்யைக் காண ஏராளமான கூட்டம் சாலை எங்கும் கூடியதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலால் விஜய் பிரசார இடத்திற்குச் செல்வது தாமதமாகி வருகிறது.






கரூரில் விஜய்; வேலுச்சாமிபுரத்தில் கூடும் கூட்டம்
நாமக்கல்லில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தற்போது கரூர் வந்திருக்கிறார்.
கரூர்-ஈரோடு சாலை வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்யவிருக்கிறார் விஜய். விஜய்யைக் காண தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வேலுச்சாமிபுரத்தி கூடியிருக்கின்றனர். கரூர் வந்த விஜய், நாமக்கல் – கரூர் ரோட்டில் மக்கள் வெள்ளத்தில் பயணித்து வருகிறார். இன்னும் சிறிது நேரத்தில் வேலுச்சாமிபுரத்தை அடைந்து தனது பிரச்சார பேச்சை ஆரம்பிக்கவிருக்கிறார்.