
விழுப்புரம்: திமுகவுக்கு எதிரான வாக்குகளைதான் தவெக தலைவர் விஜய் பிரிப்பார் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
விழுப்புரத்தில் இன்று (செப்.27) நடைபெற்ற அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை திமுக உட்பட இண்டியா கூட்டணி கட்சியினர், இரு அவைகளிலும் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் விதித்தது. ஒரு சில நல்ல அம்சங்கள் மட்டும் உள்ளது. பல பாதகமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.