
‘சரஸ்வதி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
தென்னிந்திய திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் வரலட்சுமி சரத்குமார். திருமணமான பின்பும் கூட தொடர்ச்சியாக திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது புதிதாக இயக்குநராகவும் களமிறங்கியிருக்கிறார். இப்படத்துக்கு ‘சரஸ்வதி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.