• September 27, 2025
  • NewsEditor
  • 0

பழம்பெரும் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் இளைய மகள் ஆலியா பட்டை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அத்தம்பதிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ரன்பீர் கபூர் தனது மகள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்.

ரன்பீர் கபூர் குறித்து அவரது மாமனார் மகேஷ் பட் அளித்துள்ள பேட்டியில்,

”ரன்பீர் கபூர் எப்போதும் நாம் ஒன்று பேசினால் அதனை உன்னிப்பாக கவனிக்கக்கூடியவர். அதோடு அவர் அதிக அளவில் புத்தகங்கள் படிக்கக்கூடியவர்.

ரன்பீர் மிகவும் அமைதியான பையன். இந்தத் துறையில் இவ்வளவு குடும்ப அக்கறை கொண்ட ஒருவரை நான் பார்த்ததில்லை.

ஆலியா பட், மகேஷ் பட், ரன்பீர் கபூர்

அவர் தனது வீட்டையும், மகளையும் நேசிக்கிறார். அவர் மிகவும் அதிகமாகப் படிக்கிறார், அது உண்மையில் யாருக்கும் தெரியாது.

அவர் சினிமா தொடர்பாக அதிகம் வாசிப்பார். நாங்கள் பேசும் போது, சினிமா மட்டுமல்லாமல் மிகவும் அடிப்படையான விஷயங்களைப் பற்றியும் பேசுவோம். அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால் அவர் கேட்கக்கூடியவர். கேட்கும் திறன் தான் ஒரு சிறந்த நடிகரின் அடையாளம்” என்று தெரிவித்தார். 

முன்னதாக தனது மகள் குறித்து மகேஷ் பட் பகிர்ந்த ஒரு பதிவில், ”ஆலியா பட் தனது கணவர் ரன்பீர் கபூர் உட்பட தனக்கு நெருக்கமானவர்களை ஆச்சரியப்பட வைப்பதுதான் எப்போதும் அவரது லட்சியம்” என்று தெரிவித்தார்.

ரன்பீர் கபூர் தனது மனைவி ஆலியா பட் பற்றி என்ன நினைக்கிறார் என்று மகேஷ் பட்டிடம் கேட்டதற்கு, ”அவர், ‘ஆலியா வித்தியாசமான எண்ணங்களை கொண்டவர்’ என்று என்னிடம் தெரிவித்தார்.

ஆலியா பட், மகேஷ் பட், ரன்பீர் கபூர்
ஆலியா பட், மகேஷ் பட், ரன்பீர் கபூர்

நான் அவரிடம், ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டபோது, ​​‘மேலும் மேலும் செய்ய வேண்டும் என்ற அவரது (ஆலியா) லட்சியம் நம்பமுடியாத அளவிற்கு வியக்க வைக்கிறது!’ என்று கூறினார்.

ரன்பீர் கபூர் மிகவும் நிதானமாகவும் ஆறுதலுடனும் இருக்கும் ஒரு நபர், போதுமானதைச் செய்ய விரும்புகிறார்” என்று தெரிவித்தார்.

ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் தாங்கள் கட்டி வரும் புதிய வீட்டிற்கு விரைவில் செல்ல இருக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *