• September 27, 2025
  • NewsEditor
  • 0

இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட் இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது. அதற்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கிறார் தேவா.

அங்கு அவர் ஆஸ்திரேலியாவின் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையத்தினால் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றத்திற்கு தேவா வரவேற்கப்பட்டு, அவைத் தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பளிக்கப்பட்டது.

Deva At Australia

அதனைத் தொடர்ந்து பெரும் மதிப்புகளைக் கொண்ட செங்கோலும் அவருக்கு வழங்கப்பட்டது.

தேவாவுக்கு இப்படியான மரியாதைக் கொடுக்கப்பட்டதை அவருடைய இசைக் குழுவினர் ஆர்ப்பரித்துக் கொண்டாடியதுடன், அங்கு அவரைப் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றத்தில் தேவா இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படியான மரியாதைக் கொடுப்பட்டது குறித்து தேவா பேசுகையில், “இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பயணிக்கும் தெற்காசிய கலைஞர்களின் இசை மற்றும் கலாச்சாரத்திற்கும் உரியது.

கடந்த 36 ஆண்டுகளாக எனது இசைப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் எனது உண்மையான பலமாக இருந்து வந்துள்ளது.

இந்த அங்கீகாரம் உங்களில் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது.” என நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *