
அடுத்த ஆண்டு நடக்கும் 98-வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்திப் படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகி இருக்கிறது.
நீரஜ் கேவான் இயக்கி உள்ள இதில், இஷான் கட்டார், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று வெளியானது. பல்வேறு சர்வதேசப் பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பஷாரத் பீர் என்பவர் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது.