• September 26, 2025
  • NewsEditor
  • 0

செய்தித் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வன்முறை தொடர்பான காட்சிகள் பகிரப்படுவது குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு முதல் செய்திகள் வரை அனைத்தும் சமூக ஊடகங்களில் பயனர்களால் நுகரப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் காட்சிகள் வடிவில் அனைத்தையும் பார்க்கின்றனர். வன்முறை, போர் தொடர்பான செய்திகள், காட்சிகள் எளிதாக அவர்களிடம் சென்றடைகின்றன.

இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் வன்முறை குறித்தும் மனிதத் தன்மையில் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் வேதனையாகப் பதிவிட்டிருக்கிறார்.

நிவேதா பெத்துராஜ்

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “செய்தி பார்க்க எந்தத் தளத்திற்குப் போனாலும், கொலை, போர், கொடுமைக் காட்சிகள் எளிதாகப் பரிமாறப்படுகின்றன.

நாம் தேடாவிட்டாலும் தினமும் அதை நுகர்கிறோம். இந்த அளவு வன்முறை நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்துவிடும். தகவலை அறிய வேண்டுமென்றால் வேறு வழி தேவை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *