
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் மற்றும் ஓர் ஆயுத விநியோகஸ்தரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து மணிப்பூர் மாநில காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: இம்பால் மேற்கு மாவட்டம் பானா பஜார் பகுதியில், தடை செய்யப்பட்ட பிரெபெக் என்ற தீவிரவாத அமைப்பின் ஓர் உறுப்பினரை போலீஸார் கைது செய்துள்ளனர். காக்சிங் மாவட்டத்தில் ஒருவரை மிரட்டி ரூ.5 ஆயிரம் பறித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.