
புதுடெல்லி: விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள பிஹார் மாநிலத்தில் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நியமனம் செய்துள்ளார். அவருக்கு உதவியாக மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா செயல்படுவார்கள் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ள மேற்கு வங்கத்துக்கு மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவை தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளது. அவருக்கு உதவிட திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் தேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.