மியான்மார் கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை மயத்தின் அறிக்கையின்படி இன்று (செப். 26) கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும், நாளை (செப். 27) கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 6 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் மற்றும் தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.