• September 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உ.பி.​யின் கான்​பூரில் உள்ள ராவத்​பூரில் கடந்த 4-ம் தேதி மிலாது நபி விழா நடை​பெற்​றது. இதையொட்டி இக்​கி​ராமத்​தில் ‘ஐ லவ் முகம்​மது’ என்ற வாசகத்​துடன் மின்​சா​ரப் பலகை நிறு​வப்​பட்​டது. முதல் முறை​யான இந்​தப் பலகை மிலாது நபி ஊர்​வலத்​தி​லும் எடுத்​துச் செல்லப்பட்​டது. இதற்கு இந்​துத்​துவா அமைப்​பினர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இதனால் முஸ்​லிம்​களின் வாசகப் பலகை அகற்​றப்​பட்​டது.

இதையடுத்து வகுப்​பு​வாதத்தை தூண்​டிய​தாக அடை​யாளம் தெரி​யாத 15 பேர் உட்பட 24 பேர் மீது உ.பி. காவல்​ துறை வழக்​குப் பதிவு செய்​தது. இந்த வழக்​குப் பதிவு நடவடிக்கை சமூக வலை​தளங்​களில் வைரலானது. நபிகள் நாயகம் மீது அன்பை வெளிப்​படுத்​து​வ​தில் யாருக்​கு என்ன பிரச்​சினை என முஸ்​லிம் தரப்பு கேள்வி எழுப்​பியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *