• September 26, 2025
  • NewsEditor
  • 0

வேடசந்தூர்: ​தி​முக அரசின் மோச​மான செயல்​பாடு​களால் ஆசிரியர்​கள் கடும் மன உளைச்​சலில் உள்​ளனர் என்று அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். திண்​டுக்​கல் மாவட்​டம் வேடசந்​தூரில் பொது​மக்​களிடையே நேற்று மாலை அவர் பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சியில் ஒரே ஆண்​டில் 11 அரசு மருத்​து​வக் கல்​லூரி​களை கொண்​டு​வந்​தோம். திமுக ஆட்​சி​யில் இது​வரை ஒரு மருத்துவக் கல்​லூரியை​யா​வது கொண்டு வந்​தார்​களா? தமிழகத்தை திறமையற்ற முதல்​வர் ஆள்​வ​தால் மக்​களுக்​குத் தேவையான திட்​டங்​கள் கிடைக்​க​வில்​லை.

சட்​டம் – ஒழுங்​கும் சீர்​குலைந்து விட்​டது. போதைப் பொருட்​கள் நடமாட்​டத்​தைக் கட்​டுப்​படுத்​த​வில்​லை. பெண்​கள், சிறுமிகளுக்கு பாது​காப்பு இல்​லை. கொலை, கொள்​ளை, வழிப்​பறி, பாலியல் வழக்​கு​கள் அதி​கரித்​து​விட்​டன. இப்​படிப்​பட்ட ஆட்சி தொடர வேண்​டு​மா? திண்​டுக்​கல் துணை மேயர் மகனுக்கு போதைப் பொருள் விற்​பனை​யில் தொடர்பு உள்​ள​தாக கர்​நாடக போலீ​ஸார் சம்​மன் வழங்​கி​ உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *