• September 25, 2025
  • NewsEditor
  • 0

இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் கிரிக்கெட் தனக்கு இரண்டாவது வாய்ப்பு தர வேண்டுமென்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் போதுமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் கரியருக்கு முடிவுகட்டப்பட்டதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

Karun Nair விடுவிப்பு – பிசிசிஐ சொல்லும் காரணம்?

33 வயதாகும் கருண் நாயர் இந்தியாவில் நடக்கவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக தேவதத் படிக்கல் அணியில் இடம்பெற்றுள்ளார்.

Karun Nair

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது இடங்களில் களமிறங்கிய கருண் நாயரிடம் இந்திய அணி அதிகம் எதிர்பார்த்ததாக தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் கூறியிருக்கிறார்.

“இங்கிலாந்தில் கருண் நாயரிடமிருந்து நாங்கள் அதிகம் எதிர்பார்த்தோம். தேர்வு ஒரு இன்னிங்ஸைப் பொருத்ததாக இருக்க முடியாது. தேவதத் படிக்கல் எங்களுக்கு பல ஆப்ஷன்களை வழங்குகிறார். ஒவ்வொரு வீரருக்கும் குறைந்தபட்சம் 15-20 வாய்ப்புகளாவது கொடுக்க விரும்புகிறோம், ஆனால் எப்போதும் அது சாத்தியமில்லை.” என அவர் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக படிக்கல் 150 ரன்கள் எடுத்தார், இது அவர் அணியில் மீண்டும் இடம் பெற வழிவகுத்துள்ளது.

தேவதத் படிக்கல்

“தேவதத் படிக்கல் இந்தியாவுக்குள் நல்ல ஃபார்மை காட்டியிருக்கிறார். கருண் நாயரிடமிருந்து நாங்கள் இங்கிலாந்தில் அதிகம் எதிர்பார்த்தோம்” எனக் கூறியுள்ளார் அஜித் அகர்கர்.

மறக்க முடியாத Karun Nair-இன் கரியர்

2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 303 ரன்கள் அடித்ததன் மூலம் வெளிச்சம் பெற்றார் கருண் நாயர். அதன்பிறகு அதிகம் சோபிக்காதவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஞ்சி டிராபியில் 8000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணிக்காக இரட்டை சதம் அடித்திருந்தார்.

ஐபிஎல்-லிலும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஒரு போட்டியில் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ் களமிறங்கியவர் 21.83 சராசரியுடன் 131 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். 4வது டெஸ்டில் அவருக்கு பதிலாக சாய் சுதர்ஷன் அணியில் சேர்க்கப்பட்டார். கடைசி போட்டியில் களமிறங்கிய கருண் கடினமான சூழலில் 50 ரன்கள் சேர்த்தாலும் அணியில் அவரது இடத்தைத் தக்கவைக்க அது போதுமானதாக இல்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *