
கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பங்கிங்காம் கால்வாயை தூய்மைப்படுத்தும் நோக்கில், தூய்மையே சேவை 2025 என்ற தூய்மைப் பணி இன்று தொடங்கப்பட்டது. இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜி.கராட்கர் இதனை தொடங்கிவைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே பக்கிங்காம் கால்வாய் அமைந்துள்ளது. நகரியப்பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள கடைகள் மற்றும் இறைச்சி அங்காடிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் இக்கால்வாயில் கொட்டப்படுவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.