
புதுடெல்லி: லடாக்கில் ஏற்பட்ட வன்முறையால் விலைமதிப்பில்லாத 4 உயிர்கள் பறிபோனதற்கு மத்திய பாஜக அரசே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக வெளியீட்டுப் பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், லடாக்கில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது துயரகரமானது. அரசின் தோல்வியடைந்த வாக்குறுதிகளை இது நினைவூட்டுகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம், அமைதிக்கு வழி வகுக்கும் என கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை மோசமடைந்துள்ளது.