• September 25, 2025
  • NewsEditor
  • 0

தேர்தலுக்குத் தேர்தல் மத அரசியலை மறைமுகமாக பிரதிபலிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓர் ஓட்டுக் கட்டிடத்தை வைத்து மத மோதலுக்கு சிலர் விதை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

திரு​வி​தாங்​கூர் மன்​னர் பாலர​விவர்மா தனது உறவினர், நண்​பர்​கள் காசநோ​யால் பாதிக்​கப்​பட்​ட​போது அவர்​களுக்கு சிகிச்சை அளிப்​ப​தற்​காக 1941-ல் குமரி மாவட்டம் ஆசா​ரிபள்​ளத்​தில் ஓட்டு கட்​டிடத்​தில் காசநோய் மருத்​து​வ​மனையை திறந்​தார். இது​தான் இப்​போது நவீனப்​படுத்​தப்​பட்டு அரசு மருத்​து​வக் கல்​லூரி​யாக செயல்​பட்டு வரு​கிறது. இருந்த போதும் பழமை மாறாத பழைய ஓட்டு கட்​டிட​மானது பிறப்பு – இறப்பு பதி​வாளர் அலு​வல​க​மாக செயல்​பட்டு வரு​கிறது.

இந்​தக் கட்​டிடத்​தின் ஒரு பகு​தி​யில் உள்ள சிறிய அறை​யானது மன்​னர் காலத்​திலேயே கிறிஸ்​தவர்​களின் ஜெப அறை​யாக இருந்​த​தாக கூறப்​படு​கிறது. இதை, ‘கிறிஸ்தவ சிற்​றால​யம்` என்​றும், இதைத் திறந்து மருத்​து​வ​மனைக்கு வரும் கிறிஸ்​தவர்​களை வழிபட அனு​ம​திக்க வேண்​டும் என்​றும் ஒரு தரப்​பினர் கடந்த 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக போராடி வரு​கி​றார்​கள். இந்து அமைப்​பு​கள் இதற்கு எதிர்ப்பு தெரி​விப்​ப​தால் இது தீராத பிரச்​சினை​யாக நீடித்து வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *