
சென்னை: சென்னை மாநகரில் புதைமின் வடங்கள் சேதமடைவதை தடுக்க, மாநகராட்சி, குடிநீர் வாரிய பணிகளுக்கான சாலை தோண்டும் பணிகளை மின்வாரியம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நுகர்வோருக்கு மின்சாரம் விநியோகிக்க உயரமான கம்பங்களில் மின் கம்பிகள் பொருத்தியும், நிலத்துக்கு அடியில் மின் கம்பிகளை புதைவடங்களாக பொருத்தியும் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
இதில், கிராமப்புற, புறநகர் பகுதிகளில் உயரமான கம்பங்களில் மின் கம்பிகள் வாயிலாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், நகர பகுதிகளில் அதிகப்படியான நெரிசல், உயர்ந்த கட்டிடங்கள் உள்ளதால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கே மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, புதைவட மின் கம்பிகள் பொருத்தப்பட்டன.