
டேராடூன்: ஏமாற்றும் ஜிஹாதிகளை எந்த விலை கொடுத்தாவது உத்தராகண்ட் அரசு நசுக்கும் என்று உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "(தேர்வுகளில்) ஏமாற்றுவதற்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்ததை அடுத்து, பயிற்சி மாஃபியாவும் (பயிற்சி நிறுவனங்கள்), மோசடி மாஃபியாவும் இணைந்து 'ஏமாற்றும் ஜிஹாத்' முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், 'ஏமாற்றும் ஜிஹாதி'களை அரசு எந்த விலை கொடுத்தேனும் நசுக்கும்.