• September 25, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: வன்​னியர் சங்க நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் நேற்று நடை​பெற்​றது. பின்னர் பாமக நிறு​வனர் ராம​தாஸ், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வன்​னியர்​களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்​கீடு வழங்​கக் கோரி டிசம்​பர் முதல் வாரத்​தில் வன்​னியர் சங்​கம் சார்​பில் மாவட்​ட தலை நகரங்​களில் போராட்​டம் நடத்​தப்​படும். இதில் 30 வயதுக்கு கீழே உள்ள மாணவ, மாணவி​கள், இளைஞர்​கள் பங்​கேற்​பார்​கள்.

30 வயதுக்கு மேலே உள்​ளவர்​கள் போராட்​டம் நடத்த உதவி செய்​வார்​கள். போராட்​டத்தை வடிவ​மைக்க கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி தலை​மை​யில் 7 பேர் அடங்கிய குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. நாங்​கள்​தான் பாமக என்று ஒரு கும்​பல் கூறிக் கொண்​டிருக்​கிறது. அவர்​களது வேஷம் கலைக்​கப்​படும். போலி முகவரி கொடுத்து தேர்​தல் ஆணை​யத்​தின் கடிதத்தை பெற்​றுள்​ளவர்​கள் போலி ஆசாமிகள். ‘பிஹாரில் போட்​டி​யிடு​வ​தாக கூறி மாம்​பழம் சின்​னத்தை பெற்​றுள்​ளது’ குறித்து கேட்​கிறீர்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *