
மதுரை: மின் வாரியத்தில் மின்மாற்றிகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரிய மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக மின் வாரியத்துக்கு கடந்த 2021, 2022, 2023-ம் ஆண்டுகளில் மின்மாற்றிகள் வாங்க முடிவு செய்யப்பட்டது.