• September 24, 2025
  • NewsEditor
  • 0

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது என்று அமெரிக்கா 25 சதவிகித வரி பிளஸ் கூடுதல் 25 சதவிகித வரி விதித்த இரண்டு நாடுகள் – இந்தியா மற்றும் பிரேசில்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு தொடர்ந்து கடுமையான எதிர்ப்புகளை முன்வைத்து வருகிறார் பிரேசில் அதிபர் லுலா.

நேற்று நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் லுலா கலந்துகொண்டார்.

லுலா | ஐ.நா சபை

லுலா பேசியது என்ன?

ஐ.நா பொதுச் சபையில், லுலா, “பன்முகத்தன்மை என்பது இப்போது புதிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. அதிகார பலம், இறையாண்மை மீதான தாக்குதல்கள், தன்னிச்சையான பொருளாதாரத் தடைகள், ஒருதலைப்பட்சத் தலையீடுகள் ஆகியவை இப்போது சட்டமாகி வருவதை உலகம் கண்டு வருகிறது.

உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள் நிறுவனங்களைத் தாக்குவதுடன், சுதந்திரத்தையும் குறைத்து வருகின்றன. அவர்கள் வன்முறையை ஊக்குவிக்கின்றனர். செய்தி நிறுவனங்களை அமைதியாக்க முயலுகின்றனர்.

ஐ.நா சபை

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான தாக்குதலுக்கு உள்ளான போதும், பிரேசில் 40 ஆண்டுகளுக்கு முன்பே அதன் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்தது.

அப்போது பிரேசில் அனைத்து சர்வாதிகாரிகளுக்கும், அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பியது: எங்களது ஜனநாயகமும், எங்களது இறையாண்மையும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல” என்று பேசியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *