
சென்னை: அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படவுள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக போற்றி இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், “நான் முதல்வன்”, “புதுமைப்பெண்”, “தமிழ் புதல்வன்”, “முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை” போன்ற பல்வேறு முதன்மையான தனித்துவமான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.