
டொனால்ட் ட்ரம்ப் ஒரு இலுமினாட்டி என்றால் நீங்கள் நம்புவீர்களா? இலுமினாட்டி எனும் சதிகோட்பாட்டை நம்புபவர்கள் கூட ட்ரம்பை இலுமினாட்டி சங்கத்தின் உறுப்பினர் என நம்ப மாட்டார்கள் .
எப்படி ட்ரம்பை இலுமினாட்டி என நாம் நம்ப மாட்டோமோ. அது போல அவர் நேற்று சொன்னதையும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
சிறக்கடிக்க ஆசை மீனா – விஜயா பிரச்னை தீர்ந்தால் கூட, அது தன்னால்தான் தீர்ந்தது என அவர் உரிமை கோரினாலும் நாம் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
எந்தப் பிரச்னையை எடுத்துக் கொண்டாலும், எப்போதும் டொனால்ட் ட்ரம்ப், மற்ற அனைவரைவிடவும் தனக்கு அனைத்தும் தெரியும் என்பார். தான் சொல்வது மட்டுமே சரி என்பார். நேற்றும் அதற்கு விதிவிலக்கல்ல. ஐநா பொது சபையில் உரையாற்றும் போது, நான் சொல்வது சரி என்றார்.
ஆனால் எத்தனை பிழைகள். எத்தனை பொய்கள்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐ.நா. பொதுச் சபையில் செவ்வாய்க்கிழமை ஏறத்தாழ ஒரு மணி நேரம் உரையாற்றினார்.
அதில் அவர் சொன்ன பொய்கள் அல்லது பிழைகளின் பட்டியல் இது.
டொனால்ட் ட்ரம்ப் கூறியது
பைடன் ஆட்சி காலத்தில் நான்கு ஆண்டுகளில், அமெரிக்காவுக்குள் $1 டிரில்லியனுக்கு குறைவான புதிய முதலீடு மட்டுமே வந்தது. ஆனால் நான் பதவி ஏற்ற எட்டு மாதங்களில், $17 டிரில்லியன் முதலீட்டை உறுதி செய்துள்ளோம். முதலீடுகளும் வரத் தொடங்கிவிட்டன
உண்மை:
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி $8.8 டிரில்லியன் முதலீடு மட்டுமே உறுதி செய்யப்ப்ட்டுள்ளது. அதாவது ட்ரம்ப் சொன்ன கணக்கில் சரிபாதி. அதுவும் பல வாய்மொழியாக உறுதி அளிக்கப்பட்டவை. கடந்த காலங்களிலும் இவ்வாறான உறுதி மொழிகள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக , ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் 450$ பில்லியன் மதிப்பிலான அமெரிக்க பொருட்களை செளதி அரேபியா வாங்க ஒப்புக் கொண்டதாக கூறி இருந்தார். ஆனால், அது முழுமையாக நடக்கவில்லை
டொனால்ட் சொன்னது
ட்ரம்ப் எப்போதும் காலநிலை மாற்றத்தை ஒப்புக்கொண்டது இல்லை. அவரை பொறுத்தவரை புவி வெப்பமயமாதல் என்பதெல்லாம் பொய். “என்ன புவி வெப்பமயமாகிறது என்கிறார்கள். ஆனால், எனக்கு இப்போதெல்லாம் அதிகம் குளிர்கிறது,” என அறிவியலை கிண்டல் செய்துள்ளார். நேற்றும் அதுதான். காலநிலை மாற்றம் ஒரு ஏமாற்று வேலை என்றுள்ளார்.

உண்மை:
பூமி முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப மயமாவதாக நாசா தளமே கூறுகிறது.
“கடந்த காலங்களைப் போல அல்ல. தற்போதைய வெப்பமயமாதல் வேறுபட்டதாக உள்ளது. இதற்கு காரணம், 1800-களின் மையப்பகுதியில் (அதாவது தொழிற்புரட்சிக்கு பின்பு) இருந்து மனிதச் செயல்பாடுகளின் காரணமாக புவி வெப்பமயமாதல் அதிகரித்துள்ளது.” என்கிறது
டொனால்ட் ட்ரம்ப்பின் வாதம்
“லண்டனை பாருங்கள், அங்கே ஒரு மோசமான மேயர் இருக்கிறார். அந்த நகரம் முற்றிலும் மாறிவிட்டது. இப்போது அவர்கள் ஷரியா சட்டத்தை அமல்படுத்த விரும்புகிறார்கள்.”
உண்மை என்ன?
இதற்கு எந்த சான்றுகளும் இல்லை. லண்டன் அல்லது அதன் மேயர் சாதிக் கானை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல். இது போன்ற குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல.
லண்டன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இஸ்லாமிய மேயர் கான், நீண்ட காலமாக இஸ்லாமோபோபிக் தாக்குதல்களுக்கும் தவறான குற்றச்சாட்டுகளுக்கும் இலக்காகியுள்ளார்.
அவர் 2016-லேயே “பிரிட்டனில் ஷரியா சட்டத்திற்கு இடமில்லை” என்று தெளிவாக சொல்லி உள்ளார். ஆனால், 2020-ல், கான் லண்டனில் ஷரியா சட்டத்தை சோதனை செய்து பார்க்க முயல்கிறார். மதுபான விற்பனையை தடை செய்துள்ளார் என்பது போன்ற போலி தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவின. ஆனால், இதில் கிஞ்சித்தும் உண்மை அல்ல என பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

கானின் செய்தித் தொடர்பாளரிடம் இதுப் பற்றி கேட்டபோது, அவர், “டொனால்ட் ட்ரம்ப்பின் மோசமான, பாகுபாடான கருத்துக்களுக்கு எங்களிடம் பதில் இல்லை” என்றார்.
லண்டன் மேயர் சாதிக் கான் மட்டும் டொனால்ட் ட்ரம்ப்பின் கண்களை உறுத்தவில்லை. உண்மையில் அண்மைய காலங்களில் அவரது கண்களை அதிகம் உறுத்துவது நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஜொர்ரான் மம்தானியும்தான்.
வழக்கம் போல வெறுப்பை பரவலாக்கி இருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.
சீனா உடனான ட்ரம்ப்பின் situationship
தன் தேவைக்கு ஏற்றார் போல அவ்வபோது சீனாவுடன் situationship உறவில் இருப்பார் ட்ரம்ப். அவர்களை புகழ்ந்து நாமும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பார்.
நேற்றும் அவ்வாறே. திடீரென ஒருவகை வஞ்சப் புகழ்சியைக் கையாண்டார்.
அவர் சொன்னது : “சீனாவுக்கு நான் மதிப்பளிக்கிறேன். அவர்கள் காற்றாலை தொழிற்சாலைகளை கட்டுகிறார்கள், ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் நிலக்கரி, எரிவாயுவையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். காற்று ஆலைகளை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால், அவர்கள்தான் காற்றாலைகளை உலகம் முழுக்க விற்கிறார்கள்.”

நிஜம் என்ன?
இது தவறு. உண்மை இதற்கு நேர்மாறாக உள்ளது. சீனாவே உலகில் மிக அதிக காற்றாலை மின் உற்பத்தி திறன் கொண்ட நாடு. மேலும், அதிக காற்றாலை மின் நிலையங்களை அமைக்கத் திட்டமிடுகிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த உலக காற்றாலை ஆற்றல் சங்கத்தின் தகவல்களின்படி, “உலகளாவிய காற்றாலை மின் உற்பத்தித் திறனில் சீனாவின் பங்கு பிற எந்த நாடுகளைவிடவும் அதிகம்”
அமெரிக்காவைச் சேர்ந்த Global Energy Monitor -ன் படி, உலகளாவிய 17,000 காற்றாலை மின் நிலையங்களில் 5,400 சீனாவில் செயல்படுகின்றன.
ட்ரம்ப்பின் அடுத்த பொய்
“எங்கள் மின்சாரக் கட்டணங்கள் மிகவும் குறைந்து வருகின்றன. எரிபொருள் விலை மிகவும் குறைந்துவிட்டது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் இன்னும் குறையும்,” என்றார்.
உண்மையில், டிரம்ப் பதவியேற்ற பிறகு மின்சார விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை சற்றே குறைந்துள்ளது.
அமெரிக்க அரசின் தரவுகளின்படியே கடந்த ஆகஸ்ட்டுடன் ஒப்பிடுகையில், மின்சார விலை 6.2 சதவீதம் உயர்ந்துள்ளது.