• September 24, 2025
  • NewsEditor
  • 0

தமிழக முன்னாள்  பாஜக தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் பேசுபொருளானது.

இந்நிலையில் இன்று (செப். 24) செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் அண்ணாமலையுடனான  சந்திப்பு குறித்து பேசியிருக்கிறார்.

“அண்ணாமலை அவர்கள் மாநிலத் தலைவராக இருந்தப்போதுதான் எங்களைக் கூட்டணிக்குள் கொண்டு வந்தார். டெல்லியில் உள்ளவர்களை அவர் சந்தித்துப் பேசி எங்களைக் கூட்டணிக்குள் கொண்டு வந்திருக்கலாம்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன்

ஆனால் நாங்கள் யாரையும் சந்தித்துப் பேசவில்லை. அண்ணாமலையின் முயற்சியால் தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வந்தது.

அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொள்வோம். நான் கூட்டணியில் இருந்து விலகியபோது மீண்டும் இணைய அண்ணாமலை வலியுறுத்தினார். அவரசப்பட வேண்டாம் என்று சொன்னார்.

என்னைப் பொறுத்தவரை பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைவது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியாது.

செங்கோட்டையன், நாங்கள் என எல்லோரும் எதற்காக டெல்லிக்கு சென்றோம் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

எங்களின் நலம் விரும்பிகள் நாங்கள் எதிர்பார்க்கிற மாற்றம் வரும் என்று சொன்னார்கள். அதற்காக தான் காத்திருந்தோம்.

அதற்கு வாய்பில்லை என்று தெரிந்த பிறகு தான் வெளியேறினோம். என்னை டெல்லிக்கு அழைத்து சமாதானப்படுத்த நினைத்தார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன்

இருந்தாலும் என்னால் அந்தக் கூட்டணியில் இருக்க முடியவில்லை. என் நண்பர் அண்ணாமலை வந்தபோதும் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னேன்.

அரசியலைத் தாண்டி அவர் எனக்கு நல்ல நண்பர். என்மேல் பிரியமாக இருக்கக்கூடியவர். அவர் என்னை சந்திக்கும்போது இதைதான் கேட்பார் என்று தெரியும்.

அதைப் பற்றி பேசிவிட்டு நாங்கள் மற்ற விஷயங்களைத் தான் பேசினோம்” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *