• September 24, 2025
  • NewsEditor
  • 0

‘மனதை திருடிவிட்டாய்’ இயக்குநர் நாராயணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்.

பிரபுதேவா, காயத்ரி ரகுராம், வடிவேலு நடித்த ‘மனதை திருடி விட்டாய்’, மற்றும் ‘ஒரு பொண்ணு ஒரு பையன்’ படங்களை இயக்கியவர் நாராயணமூர்த்தி (59).

குறிப்பாக அவர் இயக்கிய ‘மனதை திருடிவிட்டாய்’ படத்தில் பிரபுதேவா – வடிவேல் கூட்டணியில் அமைந்த காமெடிகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

பிரபுதேவாவுடன் நாராயணமூர்த்தி

தவிர சன் தொலைக்காட்சியில் வெளிவந்த ‘நந்தினி’, ‘ராசாத்தி’, ‘ஜிமிக்கி கம்மல்’, ‘அன்பே வா’, ‘மருமகளே வா’ போன்ற தொடர்களை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் உடல்நிலை குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் நாராயணமூர்த்தி மாரடைப்பால் நேற்று (செப்.23) உயிரிழந்திருக்கிறார்.

அவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் பையன் லண்டனில் வேலை பார்க்கிறார்.

மகன் வந்த பிறகுதான் இறுதிச்சடங்கு என்பதால், இயக்குநர் நாராயணமூர்த்தியின் உடலை தனியார் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். நாளை மறுநாள் (செப்.26) பம்மலில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *