
ராய்ப்பூர்: சத்தீஸ்கர்-மகாராஷ்டிர மாநில எல்லையில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் தலைவர்கள் ராஜு தாதா (எ) காட்டா ராமச்சந்திர ரெட்டி, கோசா தாதா காதரி சத்யநாராயண ரெட்டி ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் சிபிஐ(மாவோயிஸ்ட்) இயக்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து நாராயண்பூர் போலீஸ் எஸ்.பி. ராபின்சன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்கவுன்ட்டரில் இறந்த 2 மாவோயிஸ்ட் தலைவர்களுக்கும் தலா ரூ.40 லட்சத்தை வெகுமதியாக சத்தீஸ்கர் அரசு அறிவித்திருந்தது. அபுஜ்மார் மண்டலத்தில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து இங்கு போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.