• September 24, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சுதேசி பொருட்​களை பயன்​படுத்த வேண்​டும் என பிரதமர் நரேந்​திர மோடி வலி​யுறுத்​திய நிலை​யில், மத்​திய அமைச்சர் அஸ்​வினி வைஷ்ணவ் 'ஜோஹோ' மென்​பொருள் சேவை தளத்​துக்கு மாறி உள்​ளார். இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்​துள்​ள​தால் ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், சமீப கால​மாக உள்​நாட்​டில் தயா​ராகும் பொருட்​கள் மற்​றும் சேவை​களை (சுதேசி) பயன்​படுத்த வேண்​டும் என பிரதமர் மோடி வலி​யுறுத்தி வரு​கிறார்.

இந்த சூழலில் மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூகவலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “நான் ஆவணங்​கள், அட்​ட​வணை​கள் மற்​றும் விளக்​கப்​படங்​களுக்​காக நமது உள்​நாட்டு மென்​பொருள் சேவை தளமான ஜோஹோவை பயன்​படுத்​தத் தொடங்கி விட்​டேன். பிரதமர் மோடி​யின் கோரிக்​கையை ஏற்று அனை​வரும் சுதேசி பொருட்​கள் மற்​றும் சேவை​களைப் பயன்​படுத்த வேண்​டும்” என கூறி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *