• September 24, 2025
  • NewsEditor
  • 0

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி மாடலிங்கிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் கடந்த ஞாயிற்று கிழமை ( செப்.21) தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆதங்கத்துடன் பதிவிட்டிருந்தார்.

சாக்ஷி அகர்வால் பகிர்ந்த புகைப்படம்

அதில், “ப்யூர் வெஜிடேரியனான நான் ஆர்டர் செய்த உணவில் சிக்கன் இருந்தது. அந்த உணவை இப்போது தான் தூக்கி எறிந்தேன். இதற்கு உணவு டெலிவரி நிறுவனமான Swiggy நிறுவனம் பதில் சொல்லியே ஆக வேண்டும். எனது மத நம்பிக்கையை புண்படுத்தியதற்கு நன்றி” என்று பதிவிட்டிருந்தார்.

சாக்ஷி அகர்வாலின் இந்தப் பதிவிற்கு சிலர் ஆதரவாகவும் பலர் அவருக்கு எதிராகவும் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் விளக்கம் அளித்து தனது யூ-டியூப் சேனலில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அதில் பேசியிருக்கும் சாக்ஷி அகர்வால், “கடந்த ஞாயிற்றுக்கிழமை Swiggy மூலம் நான் பனீர் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் வந்ததோ சிக்கன்.

நான் என் வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை. ஆர்டர் செய்த உணவில் மோசமான மணம் வந்ததுடன், பனீரின் சுவையிலும் வித்தியாசம் இருந்ததால் சுதாரித்துக்கொண்டு சோதித்துபார்த்தேன்.

அது சிக்கன் எனத் தெரிந்தவுடன் வாந்தி எடுத்துவிட்டேன். நான் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டு, சைவம் அசைவம் உண்பவர்களுக்கு இடையேயான பிரச்னையோ, இந்துக்கள் – இந்து அல்லாதோருக்கு இடையேயான பிரச்னையோ இல்லை.

சாக்ஷி அகர்வால்
சாக்ஷி அகர்வால்

வாடிக்கையாளருக்கும் மோசமான வாடிக்கையாளர் சேவைக்குமான பிரச்னை. உணவென்பது ஒருவரின் தனியுரிமை. அதில் அசைவம் சாப்பிடாதது என் உரிமை.

உணவு என்பது நம் உணர்வு மட்டுமன்றி, நம்பிக்கை, கலாசாரம், மத உணர்வுகளையும் சார்ந்தது என்பதால் இப்படியான தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *