
புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவையில் பிஜு ஜனதா தளம் எம்எல்ஏவின் கேள்விக்கு மாநில தொழிலாளர் நல அமைச்சர் கணேஷ் ராம் சிங்குந்தியா அளித்த பதில் வருமாறு: சென்ற ஆகஸ்ட் மாதம் வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் ஒடிசாவை சேர்ந்த 289 தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் பணியாற்றும்போது உயிரிழந்தனர். இதே காலகட்டத்தில், பிற மாநிலங்களில் இருந்து ஒடிசா தொழிலாளர்கள் 5,612 பேரை அரசு மீட்டுள்ளது.
2024-ம் ஆண்டில் ஒடிசாவில் இருந்து 70,142 தொழிலாளர்களை பணியமர்த்துவதற்காக 1,037 ஒப்பந்ததாரர்களுக்கு ஒடிசா அரசு உரிமம் வழங்கியது. 1979-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் இந்த உரிமங்கள் வழங்கப்பட்டன.