• September 24, 2025
  • NewsEditor
  • 0

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தனது உரையை ஐ.நா சபையில் நிகழ்த்தி உள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ட்ரம்ப் முழு உரையின் முக்கிய ஹைலைட் பாயிண்டுகள் இதோ

1. அமெரிக்காவின் ‘பொற்கால ஆட்சி’

அமெரிக்காவில் தற்போது வலுவான பொருளாதாரம், வலுவான எல்லைகள், வலுவான ராணுவம், வலுவான நட்புகள் மலர்ந்திருக்கின்றன. இது அமெரிக்காவின் பொற்காலம். முன்னர் நடந்த ஆட்சியால் ஏற்பட்ட பொருளாதாரப் பேரிடர் இப்போது வேகமாகத் தணிந்து வருகிறது.

2. எனக்கு நோபல் பரிசு

நான் ஏழு மாதங்களில் ஏழு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். அதில் கம்போடியா – தாய்லாந்து, இந்தியா – பாகிஸ்தான், இஸ்ரேல் – ஈரான் ஆகிய போர்கள் அடங்கும். இதை முன்பு எந்த அதிபரோ, பிரதமரோ, நாடோ செய்ததில்லை. இதை செய்ததில் நான் பெருமை கொள்கிறேன்.

ட்ரம்ப் | ஐ.நா சபை

இதற்காக ஐ.நாவில் இருந்து எனக்கு எந்த உதவியும் கிடைத்ததில்லை. ஐ.நாவில் இருந்து போர் ஒப்பந்தத்தை முடிவு செய்வதற்கு உதவுவதற்கான தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை.

போர்களை நிறுத்தியதற்கும், ஆபிரகாம் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதற்கும் எங்கள் நாட்டிற்குப் பாராட்டு கிடைத்திருக்க வேண்டும். அது கிடைக்கவில்லை.

இதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால், எனக்கு உண்மையான முடிவில்லாத மற்றும் புகழ்பெற்ற அழிவுகரமான போர்களில் மில்லியன் கணக்கான மக்கள் இனி கொல்லப்படப் போவதில்லை என்பதும். தங்கள் தாய்மார்கள் மற்றும் தந்தையர்களுடன் இனி அவர்களது மகன்கள் மற்றும் மகள்கள் வளர முடியும் என்பதுதான்.

3. ஈரான் மீதான தாக்குதல்

மூன்று மாதங்களுக்கு முன்பு, ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா பதினான்கு 30,000 பவுண்டுகள் குண்டுகளை வீசி, அனைத்தையும் முற்றிலுமாக அழித்துவிட்டது. 22 ஆண்டுகளாக மக்கள் செய்ய விரும்பிய ஒன்றை நாங்கள் செய்துள்ளோம்.

4. காசா போர்

நான் காசா போர் நிறுத்தத்திலும் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், ஹமாஸ் தான் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை மறுத்து வருகிறது.

சிலர், பாலஸ்தீனத்தை ஒருமனதாக ஒரு நாடாக அங்கீகரித்து வருகிறார்கள். ஆனால், அது ஹமாஸ் தீவிரவாதத்தின் அட்டூழியங்களுக்கு பெரிதும் உதவும்.

ட்ரம்ப் | ஐ.நா சபை
ட்ரம்ப் | ஐ.நா சபை

5. உக்ரைன் போர் என்ன ஆனது?

உக்ரைன் போரை நிறுத்தவும் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறேன். ரஷ்ய அதிபர் புதின் உடன் எனக்கு இருக்கும் நட்பால் அது எளிதாக முடிந்துவிடும் என்று நான் நினைத்தேன். ஆனால், அது நடக்கவில்லை.

ரஷ்யா எண்ணெயை வாங்குவதன் மூலம் இந்தியாவும், சீனாவும் ரஷ்ய போருக்கு முதன்மை நிதியளிப்பவர்களாக இருக்கிறார்கள்.

நேட்டோ நாடுகள் கூட ரஷ்ய எரிசக்தி, எரிபொருள்களை ரஷ்யாவில் இருந்து வாங்கி வருகிறார்கள். அவர்கள் அவர்களுக்கு எதிரான போருக்கு அவர்களே நிதியளித்து வருகிறார்கள்.

இந்தப் போரை நிறுத்த ஐ.நாவில் கூடியிருக்கும் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இந்த நாடுகள் மீது வரி விதிக்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *