• September 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​பாஜக கூட்​ட​ணி​யில் மீண்​டும் இணைய வேண்​டும் என அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரனை வலி​யுறுத்​தி​ய​தாக தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார். மறைந்த நடிகர் எம்​.ஆர்​.​ரா​தா​வின் மனைவி கீதா ராதா கால​மானதையொட்​டி, சென்​னை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் நடிகரும் பாஜக நிர்​வாகி​யு​மான சரத்​கு​மார், ராதிகா சரத்​கு​மார் ஆகியோரிடம் அண்​ணா​மலை ஆறு​தல் கூறி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தின் அரசி​யல் களம் குறித்து அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரனிடம் பேசினேன். திமுக கூட்​ட​ணியை வீழ்த்த தேசிய ஜனநாய கூட்​ட​ணி​யால் மட்​டுமே முடி​யும். எனவே என்​டிஏ கூட்​ட​ணி​யில் மீண்​டும் இணைய வேண்​டும் என அவரிடம் வலி​யுறுத்​தி​யுள்​ளேன். முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் உள்​ளிட்ட பலரை​யும் சந்​திக்க உள்​ளேன். அவரின் சுற்​றுப்​பயணம் முடிந்​தவுடன் சந்​திப்​பேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *